மதுரை மாவட்டம், சத்யசாய் நகர் பகுதியில் சேர்ந்தவர் முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர் என். ஜி .மோகன்,இவர், தேனி மாவட்டம், போடி நாயக்கர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நில தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணப்பம் ஒன்று செய்துள்ளார், இந்த நிலையில், சுமார் 1550 நாட்களைக் கடந்து வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பதில் அளிக்காததால், மேல்முறையீடு செய்திருக்கிறார்.
மேல்முறையீடு செய்தும், முறையாக பதில் அளிக்காமல் இருந்ததால் , சென்னையில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
வழக்கு விசாரித்த ஆணையம், பதில் அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் மணிமாறன் பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பத்தாயிரத்திற்கான வங்கி வரைவோலை மோகனுக்கு, தபால் மூலம் அனுப்பட்டுள்ளது.
மேலும், மோகனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அறியாத சில அதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வதால், தகவல் ஆணையம் தலையிட்டு விண்ணப்பதாரருக்கு முறையாக இழப்பீடு மற்றும் தகவலை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.