ஜூலை 2வது வாரத்தில் பொதுத்தேர்வு மதியம் 2.30 மணிக்குள் அரசு பதில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் ஏராளமான பெற்றோர்களும் இந்த தேர்வை நடத்த வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா?
9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது என்றும், 9 லட்சம் மாணவர்கள் மட்டுமின்றி 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளது.
அதோடு ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது எனவும், எனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும், ஜூலை 2வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்தலாமா என்பது குறித்து மதியம் 2.30 மணிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.