Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

11, 12 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு இல்லை: அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்

11, 12 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு இல்லை: அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்
, திங்கள், 23 மார்ச் 2020 (07:49 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக விரைவில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்கக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு இல்லை என்றும், திட்டமிட்டபடி அந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு இன்னும் மூன்று தேர்வுகளே மீதம் இருப்பதால் அந்த தேர்வுகளை நடத்தி முடித்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகளே ரத்து ஆகியுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலைகளில் 500 சிங்கங்களை உலவவிட்டதா ரஷ்ய அரசு – சமூகவலைதளங்களில் பரவும் புகைப்படம் !