11ம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ள நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவுகள் வந்து விட்ட நிலையில் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின
இந்த நிலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் 7ம்தேதி கடைசி தேதியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
மேலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6ம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது