கஜா புயலால் 12,000 மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் புயல் கடந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன
சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்திருந்த மின்கம்பங்களும் சரிசெய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் மின்சாரம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கஜா புயல் தாக்கத்தால் தஞ்சையில் 5 ஆயிரம் மின்கம்பங்களும், நாகையில் 4 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூரில் 3 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைந்திருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.