மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்த ஆணி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்
மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக நடந்து சென்ற 12 வயது சாந்தினி என்ற சிறுமி மீது எதிர்ப்ராமல் கான்க்ரீட் துண்டு ஒன்று விழுந்தது. அந்த துண்டில் இருந்த ஆணி, சிறுமியின் மண்டை ஓட்டை சுமார் 9மிமீ வரை துளைத்திருந்தது
இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்திருந்த ஆணியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்த மருத்துவர் குழு வெற்றிகரமாக ஆணியை அப்புறப்படுத்தினர். தற்போது சிறுமி சாந்தினி நலமுடன் இருப்பதாகவும் இருப்பினும் இன்னும் ஒரு மாதம் கழித்து சாந்தினிக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்