தமிழகத்தில் அதிரடியாக 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இவர்களில் 12 அதிகாரிகள் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த முழுமையான விவரங்களை தற்போது பார்ப்போம்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப் வி.பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமனம்
ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அபேஷ்குமார் நியமனம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் ஐ.ஜி.யாக ஜெயராம் நியமனம்
பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக தினகரன், ஆயுதப்படை ஐ.ஜி.யாக லோகநாதன் நியமனம்
தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக ராஜேந்திரன், சேலம் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையராக மூர்த்தி நியமனம்
தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி.யாக செந்தில், மதுரை மண்டல அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமனம்
சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக அருளரசு, காவல்துறை நிர்வாக உதவி ஐஜியாக பி.சரவணன் நியமனம்
குழந்தை-மகளிர் குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக சுரேஷ்குமார், வணிக குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக ராஜா நியமனம்