Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

+2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை.! மருத்துவத்துறை ஏற்பாடு..!!

Plus Two Exam

Senthil Velan

, திங்கள், 6 மே 2024 (16:02 IST)
+2  தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பேசி மன நிலையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடம் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடி மனநல ஆலோசனை வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 
2023-2024 ஆம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
‘104’ – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள 24 மணி நேரமும் டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை சென்னையில் செயல்பட்டு வருகிறது.
 
104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் வாயிலாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. 

 
அதேபோன்று 14416 அழைப்பு மையம் (நட்புடன் உங்களோடு மன நல சேவை) மன அழுத்தத்தில் இருந்து விடுபெற்று மன நல ஆலோசனை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு முறைகேடு.! நாடு முழுவதும் 50 பேர் கைது..!