தமிழக ஆளுநர் ரவி இன்று சிதம்பரம் சென்றுள்ள நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சித்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் நேற்று மாலை சிதம்பரத்திற்கு நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அது பின்னர் அவர் அண்ணாமலை பல்கலைக்கழ்க விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த நிலையில் இன்று காலை அவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் கோயில் தீட்சதர் சார்பில் வழங்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டார். கோவிலுக்குள் சென்ற ஆளுநர் நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோர்களையும் தரிசனம் செய்தார். மேலும் கோவிந்த பெருமாள் சன்னதிக்கு மனைவியுடன் சென்றார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு ஆளுனர் சென்றார்.
இந்த நிலையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆளுநரை கண்டித்து கருப்பு கோட்டை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிதம்பரம் கீழ வீதி, தெற்கு வீதி காந்தி சிலை அருகில் உள்ள பகுதிகளில் அவருக்கு கருப்பு கொடி காட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவிட்டன.