தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், இந்த மாதம் தொடக்கமே தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.