கரூரில் ரூபாய் சுமார் 4 - கோடியே 64 - லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் நகராட்சி, ஆண்டாங் கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகள், வாங்கல் குப்பிச்சிபாளையம்,நெரூர் வடக்கு, சோமூர், ஆத்தூர் பூலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் கும்பகோணம் கோட்ட பனிமனையில் தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வறை கட்டுமான பணி மற்றும் ஓட்டுனர்களுக்கான திறன் மேம்பாடு புதிய பயிற்சி மையம் அமைப்பதற்க்கான பூமி பூஜை,மற்றும் சாலை பணிகள், புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள்,வடிகால் அமைத்தல்,தானிய கிடங்கு அமைத்தல், பயணியர் நிழற்குடை அமைத்தல்,பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்தல் மற்றும் சிறு பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூபாய் சுமார் 4-கோடியே 64-லட்சம் மதிப்பில் அமைப்பதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது.
இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.