தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகளை வழங்குவதாக அறிவித்தது தெற்கு ரயில்வே அறிவிப்பு.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு 9 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து ரயில் விவரங்களை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகள் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.