பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு தவறாக கேட்கப்பட்ட நான்கு ஐந்து ஆறு ஆகிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இரண்டு மதிப்பெண் கொண்ட 28 வது வினாவுக்கும் சேர்த்து மொத்தம் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்
இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேள்வித்தாளில் கேள்விகள் தவறாக கேட்கப் படுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.