தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூல் செய்ததாக 8 தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அரசு எச்சரித்து இருந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் உத்தரவு பெயரில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சோதனை செய்ததில் 272 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது என்பதும் அபராதமாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 500 மற்றும் வரிகள் செலுத்தப்படாத வாகனங்களிடம் இருந்து ரூ.57,000 வசூலிக்கபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 8 வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்த வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது