தமிழகத்தில் நேற்றுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக ரூ.8.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர்.
அந்த வகையில், தமிழகத்தில் நேற்றுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக ரூ.8.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூ.70 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாம் .