Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

செவ்வாய் கிரகத்தில் 82.மீட்டர் பனிப்பள்ளம்…

செவ்வாய் கிரகத்தில் 82.மீட்டர் பனிப்பள்ளம்…
, செவ்வாய், 7 ஜூலை 2020 (21:26 IST)
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கோள் செவ்வய் ஆகும். இது நான்காவது கோளாக உள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்த இரண்டாவது சிறிய கோள் செவ்வாய் ஆகும்.
 
ஐரோப்பியர்கள் செவ்வாய் கிரகத்திற்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டி அழகுபார்த்துள்ளனர்.  அத்துடன் செவ்வாய் கோளின் மீது இரும்பு ஆக்ஸ்ஐடு அதிகமாக உள்ளதால் இந்தக் கோள் செந்நிறமாகக் காட்சியளிக்கிறது. இதன் காரணத்தால் செவ்வாய் என்று இக்கோள் அழைக்கப்படுகிறது.
 
இக்கோள் சந்திரனுக்கு மேற்புரம் உள்ள கிண்ணக்குழிகளையும்,புவியில் உள்ளதுபோல் எரிமலைகள்,பள்ளத்தாக்குகள்,பாலைவனம், பனிமூடிய துருவப் பகுதிகளென எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
 
இதில் முக்கியமாக புவியைப் போலவே செவ்வாயின் சுழற்சிக்காலமும்,  பருவமாற்றங்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இன்னொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் சூரியக் குடும்பத்தில் உள்ள மிக உயரமான ஒலிம்பிக் மலையும்,  மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்கான மரின பள்ளத்தாக்கும் செவ்வாய் கோளில் உள்ள சொத்தாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் , இத்தனை அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ள செவ்வாய் கிரகத்தில் தற்போது மற்றொரு முக்கிய பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்களும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
அதாவது, சுகப்புக் கோளான செவ்வாய் கிரகத்தில் 82 மீ அகலம் கொண்ட ஒரு பனிப்பள்ளம் குறித்த ஸ்டன்னிங் வீடியோ ஒன்றை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
webdunia
இந்தப்  பனிப்பள்ளம் உள்ள பகுதியில் ஆழமான பள்ளம் உள்ளதால் பனி அங்கேயே இருக்கும் எனவும், இப்பனி வெப்பம் மற்றும் பதங்கமாதல் ஆகிய நிலைகளால் பாதுகாப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்