சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி விடுதலை என வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2006ம் ஆண்டு பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. விழுப்புரத்தில் விசாரணையில் இருந்த இவ்வழக்கின் விசாரணை பின்னர் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவிப்பு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.