கோவையில் ரோட்டில் அடிப்பட்டு கிடந்த பாம்பை நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் பணிமுடிந்து வீடு திரும்பும்போது ரோட்டில் பாம்பு ஒன்று அடிப்பட்டு கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த பாம்பை எடுத்துக்கொண்டு தனது வண்டியில் கோவையில் இருந்து பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அந்த பாம்பை பரிசோதித்த மருத்துவர்கள், அது பசி மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரோட்டில் மனிதிர்கள் அடிப்பட்டு கிடந்தாலே கண்டும்காணாமல் செல்லும் பலருக்கு மத்தியில், சுரேந்தரனனின் இந்த செயல் ஈடுஇணையற்றது.