வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், சில நாட்கள் முன்னதாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல வடகிழக்கில் நகர்ந்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் அதீத கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தென் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் - ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K