Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்கர பலகையில் வந்த மாற்றுத்திறனாளி பெண் - மாவட்ட ஆட்சியர் செய்த எதிர்பாராத உதவி!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (13:58 IST)
கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கை நடத்தி வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் வழங்கி உதவிடுமாறு மனு அளித்தார். அந்த மனு உடனடியாக மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஸ்கூட்டரை விரைவில் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
 
மூன்று சக்கர சைக்கிளை பெற்று சென்ற ஜோதி எனக்கு வழங்கியது போல் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் இதற்காக தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments