பொன்னமராவதியில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தேர்தலுக்குப் பின்னர் வெளியான ஒரு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ பதிவால் இருப் பிரிவினருக்கு இடையில் மோதல் வெடித்தது. இதில் மோதலைத் தடுக்க வந்த காவல்துறை, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவல்துறையின் வாகனங்களும் தாக்கப்பட்டன.
இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். நிலைமை சீராகி வருவதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகளும் குறைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பொன்னமராவதி கடந்த ஒரு வாரமாக டியூட்டி பார்த்து வரும் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த நந்தினி என்ற பெண் காவலர் விடுப்பு கேட்டு உயரதிகாரியை அணுகியுள்ளார். ஆனால் விடுப்பு கொடுக்க முடியாது என உயரதிகாரி கூறிவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நந்தினி, லீவ் தர மறுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி, வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோவை சக ஊழியர்களுக்கு அனுப்பிவிட்டு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த பதிவை கேட்ட சக ஊழியர்கள், உடனடியாக அறைக்கு சென்று அங்கு ஆபத்தான நிலையில் இருந்த நந்தினியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.