கடந்த 1986ஆம் ஆண்டு நடிகை ராணி பத்மினி கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 ஆண்டுகளாக சிறையில் தண்டனை வகித்து வந்த தூக்குத்தண்டனை கைதி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பட்டம் பதவி, கனவுகள் கற்பனைகள், நிரபராதி போன்ற தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை ராணி பத்மினி கடந்த 1986ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராணி பத்மினியின் டிரைவர் ஜெபராஜ், காவலாளி லட்சிமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 1987ஆம் ஆண்டு வெளிவந்து மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் லட்சுமிநரசிம்மனை விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி லட்சுமி நரசிம்மனை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கில் தண்டனை அனுபவித்த வந்த மற்ற இருவரில் ஒருவர் இறந்துவிட்டார் என்பதும் இன்னொருவர் தப்பியோடி தலைமறைவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.