தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாகவே வெற்றிபெற்றதாக அதிமுக வேட்பாளருக்கு பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடந்து முடிந்த நிலையில் மே 2 ல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரின் பேரில் அந்த பேனர் அகற்றப்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் “இது ஆர்வமிகுதியால் வைக்கப்பட்ட பேனரா? அல்லது என் பெயரை கெடுக்க வேண்டுமென்றே செய்ததா? என்று தெரியவில்லை. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.