திமுகவின் பொதுச் செயலாளராக யார் நியமிக்கப்பட்டாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும் என அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்த க. அன்பழகன் காலமானதை அடுத்து விரைவில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது.
அதிலும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பாகவே பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரை தேர்ந்து எடுக்க உள்ளதாக கூறப்படுக்கிறது. மேலும், கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் இருப்பதால், அவருக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், திமுகவில் பொதுச் செயலாளராக யார் நியமிக்கப்படுவது குறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திமுகவில் பொதுச் செயலாளராக யாரை நியமித்தாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும்.
ஏனென்றால் ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் அன்பழகன் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். அவரின் பதவிக்கு யாரும் போட்டிக்கு வரவில்லை. அவர் எப்போது இனமானப் பேராசிரியராக இருந்தார் எனவே அவர் பதவிக்கு யார் வந்தாலும் அதனை சிறப்பாக நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.