சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்ற தகவல் பரவியதை அடுத்து அவரது கட்சியில் சேர மாற்று கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பாஜக நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், ரஜினிக்குத்தான் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்க இருப்பதால் ரஜினி கட்சியே அடுத்து ஆட்சிக்கு வரும் என கருதப்படுகிறது
இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ரஜினியை தொடர்பு கொண்டு வருவதாகவும், ஒரு சிலர் நள்ளிரவில் அவரது போயஸ் கார்டன் வீட்டில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்கும் தினத்தன்று திமுக மற்றும் அதிமுகவில் இருந்து ஒரு சிலர் கட்சியில் வந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ரஜினியை மையம் கொண்டு இருக்கும் என்று கூறப்படுவதால் இப்பொழுது முதலே ரஜினியை அட்டாக் செய்ய திமுக உள்பட எதிர்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒருசில அமைச்சர்கள் மட்டும் ரஜினியை நேரில் சந்தித்து உள்ளதாகவும் விரைவில் இன்னும் ஒரு சில அமைச்சர்களும் அவரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது