தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகளின் பணிவு, மரியாதையை பொதுமக்கள் பார்க்கலாம். இன்னும் ஒரு படிமேலே போய் ஒருசில வேட்பாளர்கள் வாக்காளர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று ஓட்டு கேட்பதும் உண்டு
ஆனால் அதிமுக எம்பியான தம்பிதுரை நேற்று கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, '‘ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. ஓட்டுக்காக கைல, காலுல விழ முடியாது’’ என பேசியது பொதுமக்களை மட்டுமின்றி அதிமுகவினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது
நேற்று கரூர் தொகுதியில் தம்பிதுரை வாக்கு சேகரித்தபோது ஐந்தாண்டுகளுக்கு முன் தேர்தலின்போது வந்தீர்கள், அதன்பின் இப்போதுதான் வருகிறீர்கள். இந்த தொகுதிக்கு நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்? என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தம்பிதுரை, 'இதற்கு முன் இந்த தொகுதியில் எம்பியாக இருந்தவர்களை விட நான் அதிகம் தொகுதிக்கு செய்துள்ளேன். நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க, எப்படியும் நான் வெற்றி பெற்றுவிடுவேன்' என்று பேசினார்.
தம்பிதுரையின் இந்த பேச்சை கேட்டு அருகில் இருந்த அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்,