ஆளுநர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் நேற்று உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவர்னருக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கவர்னர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய தயார் கடிதம் தொடர்பாக அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில் கவர்னர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.