தமிழகத்திற்கு கோதாவரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரவழைப்பதுதான் மத்திய அரசின் முதல் பணியாக இருக்குமென்றும், இந்த தண்ணீர் தமிழகத்திற்கு வந்தபின்னர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் தாமரை மலராது என்றும், இங்கேதான் தண்ணீரே இல்லையே பின் எப்படி தாமரை மலரும் என்றும் கேள்வி எழுப்பினார்
கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்துக்கு இன்று பதிலளித்த தமிழிசை, 'தமிழகத்தில் தண்ணீரில்லாமல் போனதற்கு இந்த நாட்டை 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ்தான் காரணம். எனவேதான் எங்கள் அமைச்சர் நிதின்கட்கரி இந்த முறை முதல் பணியாக தமிழகத்திற்கு தண்ணீர் தர காவிரி கோதாவரி இணைப்பு என அறிவித்துள்ளார் எனவே இந்த திட்டம் நிறைவேறியவுடன் தமிழகத்தில் தாமரை மலரந்தே தீரும்' என்று கூறியுள்ளார்.
தமிழிசையின் இந்த கருத்தை ஒருசிலர் ஏற்று கொண்டுள்ளனர். நீங்கள் சொன்னது போல் காவிரி-கோதாவரியை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீரை வரவழைத்துவிட்டால் நிச்சயம் தாமரைக்கு வாக்களிப்போம் என டுவிட்டரில் பலர் கூறி வருகின்றனர். எனவே இனியும் தமிழகத்தில் மதவாதம் பேசாமல் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது