தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதையும் கிலோ ரூபாய் 80 முதல் 100 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் ஏறி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உருளைக்கிழங்கின் அளவு வெகுவாக குறைந்தது. இதுவே உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தின் காரணமாகும்
ஒருசில நாட்களுக்கு முன் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபாய் வரை விற்பனை ஆவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு தான் சமையலுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இரண்டுமே விலை உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் சிரமத்தில் உள்ளன
வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விலையை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க என கோரிக்கை விடப்பட்டுள்ளது