Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகாரிகளை, பொதுமக்களை மிரட்டியே இந்த ஆட்சி- அதிமுக குற்றச்சாட்டு

அதிகாரிகளை, பொதுமக்களை மிரட்டியே இந்த ஆட்சி- அதிமுக குற்றச்சாட்டு
, திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:55 IST)
சென்னை மாநகராட்சி கமிஷனர் என்ற அதிகாரமிக்க பொறுப்பில் இருந்து செயல்பட்டு வரும் திரு. ராதாகிருஷ்ணன் IAS அவர்கள், பொது வெளியில் நன்கு அறியப்பட்ட இந்திய ஆட்சி பணி அதிகாரி, அவரே இந்த ஆட்சியில் மாமூல் கொடுத்துதான் ஒரு பொது நிகழ்விற்கு செல்ல வேண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தத்துகுரியது என்று அதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தங்கள் சமூக வலைதள பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், 

''சென்னை மாநகராட்சி கமிஷனர் என்ற அதிகாரமிக்க பொறுப்பில் இருந்து செயல்பட்டு வரும் திரு. ராதாகிருஷ்ணன் IAS அவர்கள், பொது வெளியில் நன்கு அறியப்பட்ட இந்திய ஆட்சி பணி அதிகாரி, அவரே இந்த ஆட்சியில் மாமூல் கொடுத்துதான் ஒரு பொது நிகழ்விற்கு செல்ல வேண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தத்துகுரியது.
 
திமுக கவுன்சிலருக்கும், MLA வுக்கும் சேர வேண்டிய மாமூல் பணத்தை நானே என்னுடைய சொந்த காசில் இருந்து தந்துவிடுகிறேன் என சொல்லும்  நிலைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் தள்ளப்பட்டிருப்பது  தமிழ்நாட்டின் சாமானிய மக்களின்  பாதுகாப்பை கேள்விகுறியாக்கி உள்ளது !
 
எந்த இடத்தில் எல்லாம் திமுக அரசை சார்ந்தவர்கள் மாமூல் வாங்குகிறார்கள் என்ற லிஸ்ட் என்னிடம் உள்ளது அதை நான் லைவ் டிவியில் சொல்லிவிடுவேன் என சொல்லும் அளவிற்கு , ஊடகத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை கூட இந்த விடியா அரசின் மீது இல்லை என்பது நிரூபணமாகிறது. 
 
திமுக கவுன்சிலர், அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அந்த பதவிக்கு உண்டான அடிப்படை அதிகாரத்தை கூட அரசு அதிகாரிகளுக்கு கொடுக்காமல் அவர்களுக்கு கை கட்டி வாய் மூடி சேவகம் செய்ய வேண்டிய நிலையில் தான் இன்றைய உயர் அதிகாரிகள் இந்த விடியா அரசில் உள்ளனர் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
 
அதிகாரிகளை, பொதுமக்களை மிரட்டியே ஆட்சி நடத்தும், இந்த திமுக குப்பைகளும் , குடும்ப அரசியலால் வளர்ந்து வரும் விஷ பாம்புகளும் ஒழியும் நாளே தமிழ்நாட்டிற்கு உண்மையான விடியல்.''என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!