இந்தியாவின் எதிர்கட்சிகளை இணைத்து பாஜகவுக்கு எதிராக போர் வலுவான கூட்டணியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் கட்சியை தற்போது திடீரென இரண்டாக உடைந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்போது வந்துள்ள தகவலின் படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏக்களில் அஜித் பவருக்கு பாதிக்கும் மேற்பட்ட அதாவது 29 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவாரின் மகள் சுப்ரியாவுக்கு முக்கிய பதவி கொடுத்தது சரத்குமார் அண்ணன் மகனான அஜித்த பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் இதனால் தான் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு ஆளுங்கட்சியில் இணைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இனி மகாராஷ்டிராவில் தங்கள் தலைமையிலான உள்ள கட்சி மட்டுமே தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று அஜித் பவார் கூறி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சரத் பவார் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கூறப்படுகிறது