Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நீட் யுஜி 2022-ல் அசத்திய ஆகாஷ் பைஜு – ன் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி!

நீட் யுஜி 2022-ல் அசத்திய ஆகாஷ் பைஜு – ன் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி!
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (10:30 IST)
தரவரிசையில் முதல் 200-ல் 2 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் – ல் அகில இந்திய தரவரிசையில் 126-வது இடத்தை P. ஹரிணி மற்றும் 150-வது இடத்தை ரினீத் ரவிச்சந்திரன் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.


மாணவர்கள், கௌரவம்மிக்க தேசிய நுழைவுத்தேர்வு (நீட்) யுஜி 2022-ல் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று அவர்களது பெற்றோர்களுக்கும் மற்றும் ஆகாஷ் பைஜுவின் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் வழங்கியிருக்கின்றனர். P. ஹரிணி மற்றும் ரினீத் ரவிச்சந்திரன் ஆகியோர் அகில இந்திய தரவரிசையில் முதன்மையான 200 இடங்களில் இடம்பிடித்திருக்கின்றனர். இத்தரவரிசையில் 126-வது இடத்தை ஹரிணியும், 150-வது இடத்தை ரினீத் ரவிச்சந்திரனும் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.    

உலகளவில் மிகக்கடுமையான நுழைவுத்தேர்வாக கருதப்படும் நீட் – ல் வெற்றிகாண இரண்டு ஆண்டுகள் நடைபெறும் வகுப்பறை கல்வித் திட்டத்திற்காக இம்மாணவர்கள் ஆகாஷ் பைஜு – ல் சேர்ந்திருந்தனர். பாடத்திட்ட கருத்தாக்கங்களை புரிந்துகொள்வதில் அவர்களது முயற்சிகள் மற்றும் அவர்களது கற்றல் காலஅட்டவணையை சிறிதும் வழுவாமல் கண்டிப்பாக பின்பற்றியது ஆகிய நடவடிக்கைகளே நீட் தேர்வில் முதன்மையான இடங்களை தாங்கள் பெற்றிருப்பதற்கான காரணம் என்று சாதனை படைத்திருக்கும் இந்த இருவரும்குறிப்பிட்டிருக்கின்றனர்.

“இந்த இரு விஷயங்களிலும் ஆகாஷ் பைஜு எங்களுக்கு உதவியதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆகாஷ் பைஜு வழங்கிய சிறப்பான பாடத்திட்டம் மற்றும் பயிற்சியளிப்பு இல்லையெனில், குறைந்த காலஅளவிற்குள் வெவ்வேறு பாடங்களில் பல கருத்தாக்கங்களை எங்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.”  என்று அவர்கள் கூறினர்.
webdunia

சிறப்பான தேர்ச்சி பெற்ற இம்மாணவர்களை பாராட்டிய ஆகாஷ் பைஜு – ன் மேலாண்மை இயக்குனர் திரு. ஆகாஷ் சௌத்ரி கூறியதாவது: “இம்மாணவர்களது பெரும் பாராட்டுக்குரிய சாதனைக்காக அனைத்து மாணவர்களையும் நாங்கள் பாராட்டி மகிழ்கிறோம். நாடெங்கிலுமிருந்து நீட் 2022 தேர்வில், மொத்தத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்களது  சாதனையானது, அவர்களது கடும் உழைப்பின் அளவையும், அர்ப்பணிப்பு உணர்வையும், அத்துடன் அவர்களது பெற்றோரின் ஆதரவையும் நேர்த்தியாக சுட்டிக்காட்டுகிறது. எதிர்காலத்தில் இவர்களது கல்விசார்ந்த சிறப்பான முயற்சிகள் வெற்றிகாண நாங்கள் இவர்களை வாழ்த்துகிறோம்.”

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட கல்வி ஆண்டுகளின்போது நீட் தேர்வில் முதன்மையான பெர்சென்டைல் மதிப்பெண்களைப் பெறுபவர்களாக இம்மாணவர்களை மாற்றுவதற்கு ஆகாஷ் பைஜு தனிச்சிறப்பான கூடுதல் முயற்சிகளை எடுத்தது என்று அவர் மேலும் கூறினார். “எனது மாணவர்களுக்கு எப்போதும் எமது சேவை கிடைக்கப் பெறுவதற்காக எமது டிஜிட்டல் செயலிருப்பை நாங்கள் உயர்த்தினோம். பாட பகுதிகளையும் மற்றும் வினா வங்கிகளையும் ஆன்லைனில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். தேர்வுக்கான தயாரிப்பு மீது மெய்நிகர் முறையில் பல உத்வேகமளிக்கும் அமர்வுகளையும், கருத்தரங்குகளையும் நாங்கள் நடத்தியதோடு, நேர மேலாண்மைக்கான திறன்களையும் நாங்கள் கற்பித்தோம்.

எமது இந்த முயற்சிகள் பலனளித்திருப்பதை காண்பது திருப்தியளிக்கிறது; எமது மாணவர்களின் மதிப்பெண் தாள்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. எமது மாணவர்களுள் பலர், தாங்கள் விரும்பிய உயர்கல்வி திட்டத்தை மேற்கொள்ள முதன்மையான மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர்.” என்று திரு, ஆகாஷ் சௌத்ரி மேலும் விளக்கமளித்தார்.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (BAMS, BUMS, BHMS, போன்ற) இளங்கலை (யுஜி) கல்வித் திட்டங்களைப் பயில விரும்பும் மாணவர்களுக்கு தகுதி பெறுவதற்கான தேர்வாக தேசிய முகவாண்மையால்  நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும்  நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் ஆரம்பநிலை மருத்துவ கல்வி நிலையை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் நீட் தேர்வை எழுதுவது அவசியமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 6,093 பேர் பாதிப்பு; 31 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!