கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் புறநகர் ரயில் பேருந்து சேவை ஆறு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே
இருப்பினும் அனைத்து மக்களுக்கும் புறநகர் ரயில் சேவையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு சில முக்கியப் ஊழியர்களுக்கு மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது
இதனை அடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது. குறிப்பாக கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் கல்லூரி மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது
இந்த நிலையில் தற்போது புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் நெரிசல் நேரங்களில் மட்டும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் அனைத்து பயணிகளும் பயணிக்க அனுமதி இல்லை என்றும் மற்ற நேரங்களில் அனைவரும் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மிக விரைவில் அனைத்து நேரங்களிலும் அனைத்து பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது