Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சும்மா டெல்லி டெல்லினு பேசாதீங்க... அரசுக்கு அன்புமணி ரெக்வஸ்ட்!

சும்மா டெல்லி டெல்லினு பேசாதீங்க... அரசுக்கு அன்புமணி ரெக்வஸ்ட்!
, புதன், 8 ஏப்ரல் 2020 (11:47 IST)
டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா என திரும்ப திரும்ப பேச வேண்டாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், பலியும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக இருந்த நிலையில் தற்போது 5,194 ஆக உயர்ந்துள்ளது. 124 ஆக இருந்த பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமானவர்கள் எண்ணிக்கை 353 லிருந்து 402 ஆக உயர்ந்துள்ளது.
 
ஊரடங்கு காலம் ஏப்ரல் 14ல் முடிவதாக உள்ள நிலையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் டெல்லி மாநாடு சென்று வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அன்புமணி ராமதாஸ் டெல்லி போய்வந்தவர்களாலதான் பிரச்சனை என்று தமிழகத்தில் சொல்ல கூடாது. அது தவறான போக்கு என கேட்டுக்கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைதாப்பேட்டைக்கு விசிட் அடித்த ஸ்டாலின்! – மாற்று திறனாளிகளுக்கு உதவி!