பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் 2026ல் பாமக ஆட்சி அமைய வேண்டும் என பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாமக – அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பாமகவால் பெற முடியவில்லை. இந்நிலையில் சமீப காலமாக பாமக அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்தே போட்டியிட்டது.
இந்நிலையில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ள அன்புமணி ராமதாஸ் “முதலமைச்சராக வேண்டும் என்கின்ற ஆசை பதவி வெறி அல்ல, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே! தமிழ்நாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஆளவேண்டும் என்பதே நமது இலக்கு. அப்படி நடந்தால் தமிழ்நாட்டை மிக சிறந்த மாநிலமாக உயர்த்த முடியும்” என தெரிவித்துள்ளார்.