பா.ம.க. தலைவராக வரும் 28 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பா.ம.க. தயாராக தொடங்கி உள்ளது. அதுபோல 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு சேர்த்து பா.ம.க. தயாராக உள்ளது. வருகிற 28 ஆம் தேதி சென்னை திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் மகாலில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பா.ம.க.வில் இளைஞரணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் புதிய தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 28-ந்தேதி நடக்கும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
பாமக தலைவராக தற்போது ஜி.கே.மணி இருந்து வருகிறார். இவர் பா.ம.க. தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜி.கே.மணிக்கு விடை கொடுத்து விட்டு பா.ம.க.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.