Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆதரவா? அண்ணாமலை கேள்வி!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆதரவா? அண்ணாமலை கேள்வி!
, ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (08:38 IST)
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக ஆசிரியர் பணி நியமனத்தின்போது இரண்டு தகுதி தேர்வு வைப்பது ஏன் என்ற கேள்வி பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
நீட் தேர்வுக்கு மறுப்புத் தெரிவிக்கும் திமுக, ஆசிரியர் பணிக்கு பி.எட். தேர்வு மதிப்பெண் இருந்தும், டெட் தேர்வை நடத்துகிறார்கள். மேலும், டெட் தேர்வில் தேர்வானவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தகுதித் தேர்வு நடத்துகிறார்கள்.
 
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக, 2 டெட் தேர்வுகளை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?
 
2017-ல் டெட் தேர்வெழுதி ஆசிரியர் பணிக்குத் தேர்வு பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்கு காத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், டெட் தேர்வில் தேர்வான அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைதர வேண்டும் என்று வலியுறுத்தினர். கிராம சபைக் கூட்டங்களில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2017-ல் தேர்வெழுதியவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை தரப்படும்: என்றும் உறுதியளித்திருந் தார். எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் தரப்பட்டபடி, அரசாணை 149-ஐ நீக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். 
 
இவ்வாறு அண்ணா மலை வலியுறுத்தியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

101வது நாளாக மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை: இன்னும் சில நாட்கள்தான்....