தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து பட்டியல் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை அடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியதை அடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நான் 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு பதில் அனுப்பியுள்ள அண்ணாமலை கூறி இருப்பதாவது:
திமுகவினரின் ஊழலை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழி்ப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சொத்துப்பட்டியலை வெளியி்ட்டுள்ளேன். உதயநிதி ஸ்டாலின் தனது குடும்ப, அரசியல் அதிகாரத்தை தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். தற்போது அந்தநிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டாலும் அந்த நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பின்புலமாக இருப்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஊழலை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த எனக்கு முழு உரிமை உள்ளது. திமுகவினரின் மிரட்டலுக்கு நான் அடிபணிய மாட்டேன்.நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் இந்த விஷயத்தில் மன்னிப்பும் கோர முடியாது. நஷ்ட ஈடும் வழங்க முடியாது. அந்தபேச்சுக்கே இடமில்லை. உதயநிதியும், அவரது குடும்பத்தினரும் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ள சொத்துகளை தமிழக மக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்