சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தில் கடந்த 11ஆம் தேதி சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இன்று சென்னை வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
தேர்தலுக்கு பின் பிரதமர் யார்? என்பது குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது
தேர்தலுக்கு பின் காங்கிரஸ் தலையிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிக்குமா? அல்லது மூன்றாவது அணியில் இணையுமா? என்பது உறுதியாக தெரியாத நிலையில் இன்று சந்திரபாபு நாயுடுவின் சென்னை வருகை முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது