Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழகத்தில் கொரோனா Stage 3? பீலா ராஜேஷ் சொல்வது என்ன??

தமிழகத்தில் கொரோனா Stage 3? பீலா ராஜேஷ் சொல்வது என்ன??
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (13:59 IST)
கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ்.

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 
 
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இந்தியா முழுவதும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக உள்ளதும் உறுதியாகியுள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ். அவர் கூறியதாவது, உலகெங்கும் சவாலாக உள்ள நோய் அது எந்த நேரத்தில் எப்படி பாதிக்கும் என்று சொல்ல முடியாது.
 
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில் தான் உள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் கட்டம் என்பது உள்நாட்டு பரவல், அதாவது வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது. 
 
இதேபோல கொரோனா மூன்றாம் கட்டம் என்பது சமூக பரவல், அதாவது உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி - முதல்வர் பழனிசாமி!!