Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

2019 பாரதிய கிசான் திட்டத்தை கொண்டு வந்தவர் பாரத பிரதமர் - பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை!

2019 பாரதிய கிசான் திட்டத்தை கொண்டு வந்தவர் பாரத பிரதமர் -  பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை!

J.Durai

, திங்கள், 15 ஜூலை 2024 (15:32 IST)
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் மாநில கட்சி பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகைதந்தார்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.... 
 
விவசாயத்தில் பாரதிய கிசான்திட்டம் 2015 - 2016 எழுதும்போது, 38 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். சிறுகுரு பிரிவில் 39 லட்சம் பேர் வருகிறார்கள். 2019 பிஎம் கிசான் திட்டத்தை கொண்டு வந்தவர் பாரத பிரதமர். அப்போது 43 விவசாயிகள் பதிவு செய்திருந்தார்கள். 
ஒரு தவணைக்கு 2000 என்றால் 17 தவனைக்கு 34,000 வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
சமீப காலத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் 43 லட்சம் 2020 - 2021 23 விவசாயிகளும் பயனடைகிறார்கள். விவசாயிகள் அல்லாதவர்கள் 7 லட்சம் பேர் போலி விவசாயிகளாக இணைத்துள்ளார்கள்
 
44 லட்சம் விவசாயிகள் பயனடைந்தவர்கள் இன்று 23 விவசாயிகள்தான் பயனடைகிறார்கள் மீதமுள்ள விவசாயிகள் என்ன ஆனார்கள். 
 
திராவிட முன்னேற்ற கழகம் வேண்டுமென்றே மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு 43 லிருந்து 21 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது இது எப்படி?
 
23 லட்சம் பேரை ஏன் டெலிட் செய்தீர்கள். 
 
மாவட்ட ஆட்சியர்கள் 23 லட்சம் விவசாயிகள் என்ன ஆனார்கள் என சிறப்பு குறை தீர்ப்பு முகாம் அமைத்து சரி செய்ய வேண்டும். 
 
இல்லையென்றால் இரண்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
 
இரண்டு வாரத்தில் நாங்களே சிறப்பு விவசாய குறைந்த இருப்பு கூட்டம் நடத்த உள்ளோம். 
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யார் இதற்கு முக்கியமாக இருக்கிறாரோ அவரை பிடிக்க வேண்டும். கொலை நடந்த பின்பு கூறினேன் என்கவுண்டர் நடைபெறும் என்று அதேபோல் இன்று நடத்திவிட்டார்கள். 
 
கைதானவர் எப்படி அவசர அவசரமாக என்கவுண்டர் செய்து இருக்கிறார்கள். 
 
இந்தியாவில் முதல்முறையாக சரண்டர் ஆனவரை என்கவுண்டர் செய்தது இதுதான். கைதானவரிடம் எப்படி துப்பாக்கி இருக்கும்.
 
இந்த வழக்கில் திமுகவில் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார்கள்.
 
இந்த வழக்கில் ஏகப்பட்ட மர்மங்கள் இருக்கிறது.
 
தொடர்ந்து தமிழக அரசு உண்மையை மூடி மறைத்து இருக்கிறார்கள்.
 
26ம் தேதி காவிரியில் தண்ணீர் வராத டெல்டா பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். ஆகையால் விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள் மத்திய அரசு கர்நாடகாவில் அணை கட்டக்கூடாது என்பது தெளிவாக இருக்கிறது. இதில் மத்திய அரசிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும். 
இங்கிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்து காவிரி தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அப்படி செய்தால் பாரதிய ஜனதா கட்சி முழுவதுமாக நிற்கும். 
 
காவிரி நதிநீர் மேலாண்மை உறுப்பினர்கள் எல்லா மாநிலங்களிலிருந்து உறுப்பினராக இருக்கிறார்கள். 
 
பஞ்சாப்பிற்கும் ஹரியானாவிற்கும் நீர் பிரச்சனை வந்த பொழுது ஹரியானாவை காங்கிரஸ்  அரசு டிஸ்மிஸ் செய்தார்கள்.
 
திமுக காங்கிரஸ் இந்திய கூட்டணியில் இருப்பவர்கள் ஏன் சித்த ராமையாவிடம்  போய் பேசவில்லை. 
 
காவிரி பிரச்சனைக்காக மாநில ஆர்ப்பாட்டம் நடத்தினால் நாங்களும் வருகிறோம். இதுவரை சித்தராமையாவை சந்திக்கவே இல்லை ஏன்?
 
காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி திமுக அரசு கூட்டியது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். ஆரம்பிக்கும்போதே மத்திய அரசு மீது பழி போட்டால் மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் தலைமையேற்று நடத்த வேண்டும்..! அன்புமணி கோரிக்கை..!!