அரியலூர் மாணவி லாவண்யா என்பவர் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் லாவண்யாவுக்கு நீதி வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் அண்ணாமலை மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் லாவண்யா மரணத்துக்கு நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்
இந்த உண்ணாவிரதத்தை அடுத்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாவண்யா தற்கொலை விவகாரம் குறித்து அதிமுக உள்பட பல எதிர்க் கட்சிகள் மவுனம் சாதித்து வரும் நிலையில் பாஜக மட்டுமே இந்த விவகாரத்தில் ஆணித்தரமாக குரல் கொடுத்து வருகிறது என்பது என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.