இன்று நடைபெறவிருக்கும் பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு அதன் கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர்கள் யாரும் அழைக்கப்படாதது தேமுதிகவினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியுடன் சேர்ந்து தேமுதிகவும் தேர்தலை எதிர்கொண்டது. தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டும் வென்றிருந்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போன்றோர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கோ, அவரது மனைவி பிரேமலதாவுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.
2014ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமக, தேமுதிக, பாஜக கூட்டணி போட்டியிட்டது. அப்போதும் அவர்கள் வெற்றிபெறவில்லை என்றாலும் விஜயகாந்த் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.