ஓ.பன்னீர் செல்வத்தின் கைக்கு அதிமுகவை கொண்டு வர பாஜக ரகசியமாக பல நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கேவலமான தோல்வியை சந்தித்தது. தேசிய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜகவிற்கு தமிழகத்தில் இந்த தோல்வி கடுமையான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த சிலர் தோல்விக்கு பாஜக உடன் வைத்துக்கொண்ட கூட்டணிதான் காரணம் என வெளிப்படையாக கூறிய நிலையில், பாஜக தோல்விக்கான காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான் என நினைக்க்கிறதாம்.
அதாவது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு சற்று குறைவாக உள்ளதாகவும் பாஜக கருதுகிறதாம். அதேபோல், எடப்பாடி பழனிச்சாமி சசிகலா நியமித்த நபர் என்பதாலும் பாஜக எடப்பாடி மீது சந்தேக பார்வையிலேயெ இருக்கிறதாம்.
எனவே, அதிமுகவின் பொதுச்செயலாளராக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நியமிக்கும் வேலைகளை பாஜக மறைமுகமாக மேற்கொண்டு வருகிறதாம். முதலில் கட்சியை ஓபிஎஸ் கைக்கு கொண்டு வந்துவிட்டு அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ள பாஜக காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.