சிவகங்கை மாவட்டம் கீழ்டியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர்களை பொதுமக்கள் மற்றும் மக்கள் தேசம் அமைப்பினர் விரட்டி அடித்தனர்.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்க்ளின் வரலாறு பொக்கிஷம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆராய்ச்சி பாதியிலே நிறுத்தபட்டது. மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்த நீதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த ஆய்வை தலைமேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டர்.
இந்நிலையில் கீழடியில் ஆய்வு மேற்கொள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்றனர். தமிழ் தேசம் அமைப்பினர் இவர்களை நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர்கள் கிழடியை பார்க்க முடியாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.