தக்காளி விலை கிலோ 120 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருப்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக ஆகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் இன்று தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.150 ஐ தொட்டுள்ளது. இதையடுத்து சமூகவலைதளங்களில் தக்காளி பற்றிய மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பகிரப்படுகின்றன.
இந்நிலையில் மதுராந்தகத்தில் உள்ள ஆம்புர் பிரியாணி கடை உரிமையாளர் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளார். இந்த சலுகையை அவர் இன்று ஒருநாள் மட்டும் அறிவித்துள்ளார்.