நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கும் நிலையில் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டிருக்கும் இந்த நிலையில் மாணவர்கள் சிலர் கூட்டம் கூட்டமாக மைதானத்தில் விளையாடி வருவதாகவும் இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியர் அவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி பொது இடங்களில் மாணவர்கள் கூட்டமாக விளையாடினால் அவர்களுடைய பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் கோட்டாட்சியர் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்தபோது ’வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட சிலிண்டர்களை ஓட்டல்கள் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் நீர்நிலைகள் மற்றும் காலி இடங்களில் மாணவர்கள் கூட்டாக விளையாடுவது தெரிய வந்தால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் கோட்டாட்சியரின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது