சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
அதன்படி, சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக இன்று மட்டும் 1,276 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.