சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள புகாரை அடுத்து சிபிஎஸ்சி தேர்வு ரத்தாகுமா என்ற தகவல் வெளியாகி உள்ளது
சமீபத்தில் நடந்த சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்ததாகவும் சரியான விடைகளை முன்கூட்டியே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறியதாகவும் தெரியாத கேள்விகளுக்கு சி என்று பதில் அளித்து விட்டால் அதன் பின்னர் ஆசிரியர்களை அதனை திருத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இதுகுறித்து சிபிஎஸ்சி வேளாண்மை கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது