சென்னை அண்ணாநகர் டவர் மீது ஏறி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் சென்னை மக்களுக்கு இனிப்பான செய்தியாக உள்ளது.
கடந்த 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் மீது கடந்த 2011ம் ஆண்டு ஒரு தம்பதியினர் ஏறி தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து பொது மக்களுக்கு அண்ணா நகர் டவர் மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அண்ணா நகர் டவர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாகவும் டவரின் மேலிருந்து சென்னை அழகை பொதுமக்கள் ரசித்து பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக அண்ணா நகர் டவரில் பராமரிப்பு பணிகள் செய்யும் வேலை நடைபெற்று வருவதாகவும் முற்றிலும் இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இன்னும் அல்லது மூன்று நாட்களில் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவு பெற்றதும் பொது மக்களின் பார்வைக்காக திறந்து விடப்படும் என்றும் இதில் ஏறி பார்க்கும் இனிமையான அனுபவத்தை பொதுமக்கள் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.